குழப்பம் நிலவி வருகிறது - புதிய கேபிள் கட்டண முறைக்கு கால அவகாசம்!

கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகள் அமல்படுத்துவதில் கால அவகாசம் அளித்து தொலைதொடர்பு நிறுவனமான டிராய் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கேபிள் டிவியை டிஜிட்டல் படுத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தக் கேபிள் மற்றும் டி.டி.ஹெச் டிவி சந்தையில் ஒரு வெளிப்படைத்தன்மை வேண்டுமெனவும் மக்களுக்கு வேண்டிய சேவையை சரியாக அவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும் கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகளை டிராய் அறிமுகப்படுத்தியது. அதன்படி புதிய கட்டண முறைகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் சரியாக சென்றடையவில்லை என்பதாலும், இதனால் தேவையில்லாத குழப்ப கள் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனால் கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிராய் இன்று அறிவித்துள்ளது.

More News >>