நாடாளுமன்ற வளாகத்தில் ரபேல் பேப்பர் ராக்கெட் பறக்க விட்ட காங்கிரசார்!

ரபேல் ராணுவ விமான ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் மாதிரி விமானம் செய்த பேப்பர்களை ராக்கெட்டாக பறக்க விட்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு செய்ததாக பிரதமர் மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்து வருகிறார். இதனை மறுத்து வரும் மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான கணக்கு தணிக்கைக் குழு அறிக்கையை தாக்கல் செய்தது.

இதைக் கண்டித்தும், ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தியும் நாடாளுமன்றம் எதிரே காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது பேப்பரில் செய்யப்பட்ட ரபேல் விமான மாடலில் ஒரு பக்கம் மோடி படம் மற்றொரு பக்கம் அனில் அம்பானி படங்களை ராக்கெட்டாக பறக்க விட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் வானில் பேப்பர் ராக்கெட்டுகளாக பறந்தது. இந்தப் போராட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்றனர்.

More News >>