எம்எல்ஏ மரணித்தால் இடைத்தேர்தல் நடத்தாமல் இருக்க புது யோசனை சொன்ன உயர்நீதிமன்ற நீதிபதி!
ஒரு கட்சி எம்.எல்.ஏ ஒருவர் இறந்து விட்டால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தாமல் சம்பந்தப்பட்ட கட்சியே ஒருவரை எம்எல்ஏவாக நியமித்துக் கொண்டால் என்ன? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவாரூர் இடைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தொடப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்து வருகிறது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இடைத்தேர்தல் நடத்துவதால் அநாவசிய செலவுகள், சட்டம் ,ஒழுங்கு பிரச்னைகள் உருவாகின்றன. இதைத் தவிர்க்க எந்தக் கட்சி எம்எல்ஏ இறந்தாலும் அதே கட்சி வேறு ஒருத்தரை எம்எல்ஏவாக நியமிக்கும் அதிகாரம் கொண்டு வரலாமே என்ற யோசனை தெரிவித்தார். இந்த யோசனை எம்எல்ஏக்கள் இறந்தால் மட்டுமே தவிர, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் விவகாரத்திற்கு பொருந்தாது என்றார் நீதிபதி கிருபாகரன்.