வந்துவிட்டது மோடி சேலை - குஜராத்தில் விற்பனை அமோகம்!
மக்களவைத் தேர்தல் ஸ்பெஷலாக மோடி உருவப்படத்துடன் கூடிய புதுரக சேலை குஜராத்தில் சக்கை போடு போடுகிறது.
ஏற்கனவே மோடி உருவப்படம் பொறித்த டி-சர்ட்டுகளை பாஜக தொண்டர்கள் அணிந்து வலம் வருகின்றனர். கடந்த தீபாவளிக்கு மோடி உருவப் படத்துடன் தங்க டாலர் செயின்கள் வெளியிடப்பட்டன.
தற்போது மக்களவைத் தேர்தல் ஸ்பெஷலாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், ஜவுளிக்குப் பெயர் போன சூரத்தில் மோடி படம் இடம்பெற்றிருக்கும் வண்ண வண்ண சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த மோடி சேலை குஜராத்தில் அமோக விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு விநியோகிக்க பாஜகவினர் பெருமளவில் ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் தகவல் .