மக்களவைத் தேர்தல்:நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு - சீமான் அறிவிப்பு!
வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் பெண்களுக்கு மொத்தமுள்ள தொகுதிகளில் 50% இடஒதுக்கீடு செய்யப் படும் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் 20 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து அந்தத் தொகுதிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார் சீமான். அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி உள்ளிட்ட இதர 20 தொகுதிகளை ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள சீமான் விரைவில் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு பிரச்சாரத்தில் முந்துவார் என்று தெரிகிறது.