புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத்தை நியமனம் செய்து சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக தற்போது பதவி வகிப்பவர் அச்சல் குமார் ஜோதி. இவர் இன்றுடன் ஓய்வுபெறுகிறார். இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், முன்னதாக புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் பணியை சட்ட அமைச்சகம் நடத்தியது.

இந்நிலையில், நேற்று புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் செய்து சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.இன்று அச்சல் குமார் ஓய்வுப்பெறும் நிலையில், நாளை ஓம் பிரகாஷ் ராவத் பதவியேற்க உள்ளார்.

குஜராத் மாநில முன்னாள் தலைமை செயலாளரான அச்சல் குமார் ஜோதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னாள் பொருளாதார துறை செயலாளர் அசோக் லவேசா தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரும் நாளை பதவி ஏற்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

More News >>