தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா - ஜனாதிபதி அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த பதவிக்கு சுஷில் சந்திராவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் மூன்று பேர் பதவியில் இருப்பார்கள். ஒருவர் தலைமை தேர்தல் ஆணையர். மற்ற இவர்கள் அவருக்கு கீழ் பணியாற்றுவார்கள்.அதன்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையராக டிசம்பர் 2ம் தேதி சுனில் அரோரா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையின் கீழே இந்தியா நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர் பதவியில் ஒரு பதவி காலியாக இருந்தது. காலியாக இருந்த அந்த பதவிக்கு மத்திய நேரடி வரி வாரிய சேர்மன் சுஷில் சந்திராவை தேர்தல் ஆணையராக நியமித்து அறிவித்துள்ளார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

ஐ.ஐ.டி.யில் பயின்ற இவர் கடந்த 1980ம் ஆண்டின் இந்திய வருவாய் பணி அதிகாரியாக பதவியேற்றார். அதன்பின் மத்திய நேரடி வரிகள் விதிப்பு தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த பதவி காலம் 2019ம் ஆண்டு மே மாதம் வரை உள்ளது. சந்திராவை தொடர்ந்து அசோக் லாவாசா பிற ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தலை நடத்தும் வகையில் அதிகாரிகளின் நியமனம் விரைவாக நடைபெறுகிறது. இதனால் சில தினங்களில் லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

More News >>