மாலை நேர சூப்பர் ஸ்னாக் ப்ரோக்கோலி கட்லட்
ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம ப்ரோக்கோலி கட்லட் எப்படி செய்றதுன்னு பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்:
உப்பு - சிறிதளவு
வெங்காயம் - 100 கிராம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 150 கிராம்
ப்ரோக்கோலி - 300 கிராம்
பிரட் க்ரம்ஸ் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்
பால் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் ப்ரோக்கோலி போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
பிறகு வடிகட்டி ப்ரோக்கோலியை தனியாக எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
அதில், சிறிது உப்பு, மிளகாய்த்தூள், அரைத்து வைத்த ப்ரோக்கோலி, கொத்தமல்லி ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து கிளறி இறக்கவும்.
இந்த ப்ரோக்கோலி கலவை ஆறியதும், பிரட் க்ரம்ஸ் சேர்த்து பிசைந்து கட்லட் பதத்திற்கு தயார் செய்யவும்.
கட்லட் ஒவ்வொன்றாக எடுத்து மைதா மற்றும் சோள மாவு கலவையில் முக்கி எடுத்து மீண்டும் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.
பிறகு பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லட் துண்டுகளைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி ப்ரோக்கோலி கட்லெட் ரெடி..!