இரவிலும் படம் எடுக்கலாம் ரெட்மி நோட் 7! இம்மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம்!

குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பாக புகைப்படம் எடுக்க உதவும் சூப்பர் நைட் ஸீன் வசதி கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜனவரி மாதம் சீனாவில் சந்தைக்கு வந்த இந்த போன், மூன்றே வாரங்களில் 10 லட்சம் விற்பனையை எட்டியுள்ளது. சீனாவுக்கு வெளியே சர்வ தேச சந்தையில் முதன்முதலாக இந்தியாவில்தான் இது அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரெட்மி நோட் 7 ஸ்போர்ட்ஸ் போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.3 அங்குலம் எஃப்ஹெச்டி; 1080 X 2340 பிக்ஸல் தரத்துடன்

இயக்க வேகம்: 3 ஜிபி RAM மற்றும் 4 ஜிபி RAM உடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி வகைகள்

முன்பக்க காமிரா: தற்படம் (செல்ஃபி) எடுப்பதற்கு 13 எம்பி தரம்

பின்பக்க காமிரா: 48 எம்பி தரத்தில் ஜிஎம்1 சென்ஸாருடன் மற்றும் 5 எம்பி தரத்தில் என இரண்டு காமிராக்கள்

பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 660 ஆக்டாகோர்; சிஸ்டம் ஆன் சிப்

பேட்டரி: 4000 mAh ஆற்றல்

சீக்கிரமாக சார்ஜ் செய்ய உதவும் குயிக் சார்ஜ் 4 வசதி மற்றும் தொடுதிரை பாதுகாப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆகியவை இதனுடன் கிடைக்கின்றன.

3 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ஏறத்தாழ 10,300 ரூபாய் விலையிலும் 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ஏறத்தாழ 12,400 ரூபாய் விலையிலும் 6 ஜிபி RAM 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ஏறத்தாழ 14,500 ரூபாய் விலையிலும் சீனாவில் சந்தப்படுத்தப்பட்டன. இந்தியாவிலும் இதற்கு ஒப்பான விலையிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>