காஷ்மீர் வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 44 ஆனது - தூத்துக்குடி வீரரும் உயிரிழந்த சோகம்!
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 44 அதிகரித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகன அணிவகுப்பின் மீது பாக்.ஆதரவு தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்கச் செய்தான். இந்த பயங்கர தாக்குதலில் வீரர்கள் சென்ற ஒரு வாகனம் வெடித்து தீப்பிடித்து சிதறியது. அந்த வாகனத்தில் இருந்த வீரர்கள் 44 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் பலியான தகவல் வெளியாகி உள்ளது. சீவலப்பேரியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்பிரமணியன் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு பணிக்குத் திரும்பிய போது தாக்குதலில் பலியாகி உள்ளார்.