என் மகனாக நினைத்து அன்புமணியை ஜெயிக்க வைக்கிறேன்! ராமதாஸுக்கு உறுதிகொடுத்த எடப்பாடி!

மீண்டும் தருமபுரி தொகுதியில் ஜெயிக்காவிட்டால், அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான்' என அச்சத்தில் இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். பெண்ணாகரம் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் இன்பசேகரன் 76,848 வாக்குகளைப் பெற்றார்.

இதே தொகுதியில் அன்புமணி ராமதாஸ் 58,402 வாக்குளைப் பெற்று தோல்வி அடைந்தார். ஏறக்குறைய பத்து சதவீத வாக்குகளை அதிகம் வாங்கினார் இன்பசேகரன். இந்த சதவீத கணக்கு அன்புமணியின் உதறலை அதிகப்படுத்தியிருக்கிறது.

திமுகவோடு அணி சேர்ந்தால் உறுதியாக தருமபுரியில் வெற்றி பெற்றுவிடலாம் என மனக்கோட்டை கட்டி வருகிறார். இதற்கு எதிர்மறையாக எடப்பாடி ஆட்சியைப் புகழ்ந்து வருகிறார் ராமதாஸ்.

அன்புமணியின் ஊசலாட்டத்தை அறிந்து ராமதாஸிடம் பேசிய எடப்பாடி, ' உங்களுக்கு எந்த சந்தேகமும் வர வேண்டிய அவசியமில்லை. என்னுடைய மகனாக நினைத்து அன்புமணியை ஜெயிக்க வைப்பேன். தயவு செய்து என்னை நம்புங்கள். மீண்டும் அவர் நாடாளுமன்றம் செல்வார்' என நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

-எழில் பிரதீபன்

 

தி.மு.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை.... வீதிக்கு வந்தது ராமதாஸ்- அன்புமணி மோதல்!

More News >>