சுதீசை விட அப்பர் ஹேண்ட் எடுக்க தயாராகி விட்டது கேப்டனின் புள்ளை..!

தேமுதிகவின் இளைஞரணி தலைவர் சுதீஷ் தலைமையில் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவை சமீபத்தில் அமைத்திருந்தார் விஜயகாந்த்.

நேரடியாக இந்த குழு எந்த ஒரு கட்சியின் பேச்சுவார்த்தைக் குழுவிடமும் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்து பேசிய சுதீஷ், " பாஜக தலைமையுடன் பேசி வருகிறோம். விரைவில் கூட்டணி உறுதி செய்யப்படும் " என்றார். சுதீஷின் இந்த கருத்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை கடுப்பாக்கியிருக்கிறது.

உடனே மாமா சுதீஷிடம், " எந்த ஒரு கட்சியும் கூட்டணி பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. நீங்கள் ஏன் பாஜகவுடம் பேசுவதாக சொன்னீர்கள் ? அப்பா பாணியில் அரசியல் செய்ய வேண்டும். யாருக்கும் அடங்கிப் போகக்கூடாது. மற்ற கட்சிகளுக்கு நாம் ஒன்றும் இளைத்தவர்கள் கிடையாது. நீங்கள், நாம் ஏதோ கூட்டணிக்கு ஏங்கிக் கிடப்பது போல பேசுகிறீர்கள் . இப்படி பேசுவது நம்மை பல கீனப்படுத்தும் " என எகிறியிருக்கிறார்.

இதனால் இருவருக்கும் வார்த்தைகள் தடித்துள்ளன. அப்போது, " அப்பா இருக்கும் போது நம் அலுவலகத்தை தேடி எல்லோரும் ஓடி வந்தார்கள். அந்த நிலை இப்போதும் வரும். நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள் ? நம்மைத் தேடி வரும் கட்சிகளிடத்தில் தான் நாம் கூட்டணி பேச வேண்டும்.

என்னைப் பொருத்தவரை, அதிமுக, திமுக, பாஜக, பாமக கட்சிகளே வேணாம். நம் தலைமையில் அல்லது புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம். இல்லையெனில் கெத்தாக தனித்துப் போட்டியிடலாம். அப்பா சென்னைக்கு வந்ததும் இதைத்தான் நான் வலியுறுத்தப் போகிறேன் " என கோபம் காட்டியிருக்கிறாராம் விஜயபிரபாகரன். இதனால் மாமனுக்கும் மச்சானுக்கும் மன வருத்தம் உருவாகியுள்ளதாம். "கட்சியில் சுதீசை விட அப்பர் ஹேண்ட் எடுக்க தயாராகி விட்டது கேப்டனின் புள்ளை " என்கிறது தேமுதிக வட்டாரம்.

More News >>