காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் சவப்பெட்டியை தோளில் சுமந்த ராஜ்நாத்சிங்!
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தின் உயிரிழந்த வீரர் ஒருவரின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை மத்திய உள்துறை அமைச்சர் தோளில் சுமந்து சென்று ராணுவ வாகனத்தில் ஏற்ற உதவி செய்தார்.
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பின் தீவிரவாத தாக்குதலில் 41 வீரர்கள் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்த வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவரவரின் சொந்த ஊருக்கு அரசு மரியாதையுடன் அனுப்பப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்ற புலவாமாவுக்கு நேரில் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வீரமரணமடைந்த வீரர் ஒருவரின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை தோள் கொடுத்து தூக்கிச் சென்ற காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.