`கண்டிப்பா லவ் மேரேஜ் தான் பாஸ் - நடிகர் ஜெய் குஷி!
நடிகர் ஜெய் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘மதுரராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ஜெய் நடிப்பில் ‘பார்ட்டி’, ‘நீயா-2’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. இந்தநிலையில் னது 25-வது படமாக ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவரும் நடிகை அஞ்சலியும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் இவர்களின் காதலில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.
இந்த கிசுகிசுப்புகள் குறித்து நடிகர் ஜெய் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், ``இவையனைத்தும் வதந்திகள் மட்டுமே. நானும், அஞ்சலியும் நெருங்கி பழகியது என்னவோ உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மட்டுமே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் பலூன் படத்தில் நடித்ததோடு சரி அவரை அதன்பின் நான் பார்க்கவேயில்லை.
அஞ்சலி என் காதலி அல்ல; தோழிதான். எங்கள் நட்பு எப்போதும் தொடரும். இதேபோன்று தான் ராஜாராணி படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும் எனக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. து இப்போதும் தொடர்கிறது. தொடர்ந்து அவருடன் பல படங்களில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இப்போதைக்கு எனது திருமணம் குறித்து யோசிக்கவேயில்லை. ஒருவேளை நான் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அது கண்டிப்பாக காதல் திருமணமாகத்தான் இருக்கும்" எனக் கூறியுள்ளார்.