ஓசூர் தொகுதி காலியா? இல்லையா?- தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம்!

மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் தேர்தலை நடத்த தயாராக உள்ளதாகவும், ஓசூர் தொகுதியை காலியாக உள்ளதாக தமிழக அரசிடம் இன்னும் தகவல் வரவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதசாகு, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் அதற்கும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.ஓசூர் தொகுதியைப் பொறுத்தவரை காலியானதாக தமிழக அரசிடமிருந்து இதுவரை தகவல் வரவில்லை. காலியானதாக அறிவிக்கப்பட்டால், மற்ற தொகுதிகளுடன் சேர்த்து ஓசூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த தயார் என்றும் சத்ய பிரத சாகு தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக வரும் 23, 24-ந் தேதிகளில் அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

 

More News >>