உடலுக்கு வலிமை தரும் ஆட்டுக்கால் சூப்..!

ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம் உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய ஆட்டுக்கால் சூப் எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம்.

தேவையான பொருட்கள்:

தக்காளி

மிளகு

சீரகம்

இஞ்சி

பூண்டு

உப்பு

கருவேப்பிலை

வெங்காயம்

கொத்தமல்லி

மஞ்சள்

செய்முறை:

முதலில் வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, குக்கரில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் அரைத்து வைத்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், ஆட்டுக்கால் அத்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சுமார் 20 விசில் விட்டு இறக்கவும்.

அவ்ளோதாங்க.. தயாரான சூப்பை கப்பில் ஊற்றி கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுவையான சத்து நிறைந்த ஆட்டுக்கால் சூப் ரெடி..!

More News >>