நள்ளிரவிலேயே சென்னை திரும்பிய விஜயகாந்த் - தடபுடல் வரவேற்பளிக்க காத்திருந்த தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சென்னை திரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவிலேயே வந்து விட்டார் என்ற தகவலைக் கேட்டு தடபுடல் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்திருந்த தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கடந்த 2 மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், பூரண நலம் பெற்று இன்று காலை 8.30 மணிக்கு சென்னை திரும்புகிறார் என்று தேமுதிக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் படு உற்சாகமடைந்த தேமுதிக தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்தை வரவேற்க தடபுடல் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஆனால் காலையில் விடிந்ததும் பார்த்தால் விஜயகாந்த் நள்ளிரவு ஒரு மணிக்கே சென்னை வந்து வீட்டிற்கு சென்று விட்டார் என்று தகவல் வெளியாக விஜயகாந்தை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற பெரும் வருத்தம் அடைந்தனர். ஆனாலும் உடல்நலம் தேறி விஜய்காந்த் நல்லபடியாக வந்து விட்டது பெரும் சந்தோஷம் என ஆறுதல்பட்டுக் கொண்டன

More News >>