தெற்கு தமிழ்நாடு சிக்கன் மிளகு கறி
சிக்கன் மிளகு கறி
தேவையான பொருள்கள்
சிக்கன் - அரைக் கிலோபெரிய வெங்காயம் - 2தக்காளி - 2பூண்டு - 5 பல்இஞ்சி - சிறிய துண்டுமிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்மல்லித்தூள் - 2 ஸ்பூன்மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்பட்டை - 1கிராம்பு - 2கறிவேப்பிலை - சிறிதுஎண்ணெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவு
செய்முறை
பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சியை விழுதாய் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியபின் இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி, பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கி கழுவிய சிக்கனைப் போட்டு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது கறிவேப்பிலையையும் உடன் சேர்த்துக் கொள்ளவும்.
கறி நன்கு வதங்கியபின் 1 டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவிடவும்.நன்றாக கொதித்து குழம்பான பிறகு, மூடியைத் திறந்து நன்றாக கிளறி குழம்பு நன்கு கெட்டியானவுடன் இறக்கவும்.