கைமாறப்பட்ட பல நூறு கோடி ரூபாய் சொத்து! மௌனம் காட்டும் திராவிடத் தலைவர்!!
கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொள்முதல் செய்யப்பட்ட அந்தப் பெரும் சொத்தைப் பற்றித்தான் திராவிடக் கட்சிப் பிரமுகர்கள் கூடிக் கூடி விவாதம் நடத்தி வருகின்றனர். செட்டிநாட்டு அரசரின் உதவியாளராக இருந்தவர், ஒரு சாதாரண கிளர்க்காகத்தான் அவரிடம் பணிக்குச் சேர்ந்தார்.
குதிரைப் பந்தய மோகத்தில் சொத்துக்களின் வழியாக வந்த வருமானத்தைப் பற்றியெல்லாம் அந்த அரசர் கவலைப்படவில்லை. அனைத்தையும் எஸ் ஆன அந்த நபர் பார்த்துக் கொள்வார் என குதிரை மோகத்தில் அலைந்தார்.
அவர் கேட்டபோதெல்லாம் லட்சங்களை வாரிக் கொடுத்தார் உதவியாளர். அந்தப் பணம் எந்தவகையில் வந்தது என்பதைப் பற்றி அரசர் கவலைப்படவில்லை.
அவரது கல்வி நிறுவனங்களின் கதவுகளைவிட, பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை நீதிமன்றமே கேள்வி கேட்டது. அந்த உதவியாளருக்குச் சொந்தமாக கடற்கரைச் சாலையில் இருந்த பல நூறு கோடி மதிப்புள்ள நிலங்கள், சத்தமில்லாமல் திராவிடத் தலைவரின் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது.
கறுப்பு, வெள்ளையாக எவ்வளவு கைமாறப்பட்டது என்பது பற்றி யாரும் மூச்சுவிடவில்லை. அடுத்து எங்கள் ஆட்சி தான் என்பதால், அவ்வளவு பெரிய சொத்தை இலவசமாக வாங்கிவிட்டார்களா என்ற சந்தேகமும், கட்சிக்காரர்கள் மத்தியில் உள்ளது.
சொத்துக்களை தாரைவார்த்துக் கொடுத்ததில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம் அந்த உதவியாளர்.