சில்லி சீஸ் வெங்காய தோசை ரெசிபி..!
டெய்லி சாதா தோசை சாப்ட்டு சாப்ட்டு அலுத்து போயிருப்பிங்க.. அதனால, இன்னைக்கு சில்லி சீஸ் ஆனியன் தோசை எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம்..
தேவையான பொருட்கள்:
நறுக்கிய வெங்காயம்
துறுவிய சீஸ்
நறுக்கிய பச்சை மிளகாய்
நறுக்கிய கொத்தமல்லித்தழை
மஞ்சள் தூள்
தோதை மாவு
செய்முறை:
ஸ்டவ்வில் தவா வைத்து சூடானதும் தோசை ஊற்றவும்.
அதன்மீது, வெங்காயம், பச்சை மிளகாய், சீஸ், மஞ்சள் தூள், கொத்தமல்லி ஆகியவை தூவவும்.
தோசை வெந்ததும் மூன்று பக்கமும் மடித்து திருப்பினால் சுவையான சில்லி சீஸ் தோசை ரெடி..!