தூத்துக்குடி ஸ்பெஷல் நண்டு ஃபிரை ரெசிபி

தூத்துக்குடியில் பிரபலமான ஸ்பெஷல் நண்டு ஃபிரை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்க போறோம்..

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1

நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்

கடுகு

மிளகாய் தூள்

மல்லித்தூள்

உப்பு

கொத்தமல்லி

கறிவேப்பில்லை

மசாலாவிற்கு.. இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் ஆகிய நான்கையும் விழுதா அரைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த மசாலா விழுதில் சிறிது உப்பு சேர்த்து கிளறி வைக்கவும்.

செய்முறை:முதலில், அரைத்து வைத்த மசாலா விழுதை நண்டின் மீது முழுமையாக தடவவும் சிறிது நேரம் ஊற வைக்கவும்.

பிறகு, ஒரு வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.

அத்துடன், வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வெந்ததும் அதில், ஊற வைத்த மசாலா நண்டினை ஒவ்வொன்றாக வைத்து, அத்துடன் தக்காளி சேர்த்து வேக விடவும்.

நண்டு ஒரு பக்கம் வெந்ததும், மறு பக்கம் திருப்பி போட்டு வேக விடவும்.

இறுதியாக, கொத்தமல்லித் தூவி இறக்கினால் சுவையான தூத்துக்குடி ஸ்பெஷல் நண்டு ஃபிரை ரெடி..!

More News >>