வீட்டிலேயே பன்னீர் எப்படி செய்யலாம் ?
வீட்டிலேயே பன்னீர் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொழுப்பு நிறைந்த பால் - 2 லிட்டர்
எலுமிச்சை பழம் - 2
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால் முழுவதும் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
பால் காய்ந்து பொங்கி வரும நேரத்தில், எலுமிச்சை பழ சாறை அதில் ஊற்றவும்.
பால் திரிய ஆரம்பித்ததும் சுண்டும் வரை நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் நன்றாக சுண்டியதும், அதனை ஒரு வெள்ளை துணியில் ஊற்றி, வடிக்கட்டியில் தண்ணீர் அனைத்தும் வெளியே வரும்படி அழுத்தவும்.
பிறகு, ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதனை பன்னீர் மூட்டை மீது வைக்கவும்.
சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு, மூட்டையை பிரித்து பன்னீரை தனியாக எடுத்து தட்டில் வைத்து துண்டுகளாக வெட்டவும்.
அவ்ளோதாங்க.. வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய பன்னீர் சமைக்க ரெடி..!