மக்களவைத் தேர்தலில் போட்டியுமில்லை, யாருக்கும் ஆதரவுமில்லை..... இன்னும் கட்சியே ஆரம்பிக்காத ரஜினி அறிவிப்பு!
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
அரசியலுக்கு இப்போ வருகிறேன்... அப்போ வருகிறேன்.... என்று இழுத்தடித்துக் கொண்டு இருக்கும் ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பித்த பாடில்லை.இன்று ரஜினி மக்கள் மன்றம் பெயரில் திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தமது இலக்கு சட்டப்பேரவைத் தேர்தல் தான் என்பதால் வரும் மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என ரஜினி அறிவித்துள்ளார். மேலும் வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று கூறியுள்ள ரஜினி, தமது படத்தையோ, ரஜினி மக்கள் மன்றம், ரஜினி ரசிகர் மன்றத்தின் கொடியையோ யாரும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் தடை போட்டுள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய தலையாய பிரச்னையான தண்ணீர் பிரச்னையை யார் தீர்த்து வைப்பார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் அறிக்கையில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தை ‘தலைவன்’ என அழைப்பதா? சீமான் கடும் கண்டனம்