பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை வரவேற்கிறேன் - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை வரவேற்கிறேன் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. கணிசமான கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாஜக அரசின் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு சாதாரண சுயேட்சை வேட்பாளரிடம் ஆளுகின்ற கட்சியும், ஆண்ட கட்சியும் தோற்று இருப்பது அந்த கட்சிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. இடைதேர்தலில் ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றது இதற்கு முன்பு நிகழ்ந்தது இல்லை.

நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி தொடங்குகிறார்கள். ரஜினி பாஜகவுடன் கூட்டணி சேருவாரா? என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. யாரும் கூட்டணி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி ஆரம்பிப்பதில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்.

கர்நாடக மாநிலத்தில் நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சிக்கு வரும். ஏற்கனவே அங்கு பாஜக ஆட்சியில் இருந்ததால் மக்களின் தேவைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளது. ஆகவே, காவிரி நீர்பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் சுமூகமாக தீர்வு காணப்படும்.

தமிழகத்தில் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானது தான். காலத்தின் கட்டாயம்” என்று கூறியுள்ளார்.

More News >>