கிரிக்கெட் மைதானத்தில் திடீரென ஒலி எழுப்பிய அலாரம் ..... அலறியடித்து ஓட்டம் பிடித்த வீரர்கள்!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் திடீரென தீ விபத்து அபாய எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்பியதால் வீரர்கள், ரசிகர்கள் என மைதானத்தில் இருந்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மார்வல் மைதானத்தில் உள்நாட்டில் பிரபலமான பிக்பாஸ் லீக் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. ஆட்டம் தொடங்க சில நிமிடங்களுக்கு முன் திடீரென தீ விபத்து எச்சரிக்கை கருவி ஒலி எழுப்பியது. இதனால் அலறியடித்த மைதான நிர்வாகம் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் , ஊழியர்கள் என அனைவரையும் அவசர, அவசரமாக வெளியேற்றியது.
தீயணைப்புப்படை வாகனங்களும் விரைந்தன. ஆனால் தீ விபத்து ஏதும் நிகழவில்லை. கருவியின் மின் இணைப்பில் நடந்த சிறு கோளாறு காரணமாக தவறுதலாக எச்சரிக்கை ஒலி எழுப்பியதை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர். இதனால் நிம்மதியடைந்த மைதான நிர்வாகத்தினர் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின் போட்டியை நடத்த அனுமதித்தனர்.
இது தான்டா தேசபக்தி... இந்தியர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட தோனி