சூப்பர் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் தித்திக்கும் குழிப்பணியாரம்..!
ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம் தித்திப்பான குழிப்பணியாரம் எப்படி செய்றதுனு பார்க்கப்போறோம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி
வாழைப்பழம்
சர்க்கரை
பனவெல்லம்
ஏலக்காய் தூள்
செய்முறை:
முதலில் பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, பின்னர் வடிகட்டி எடுத்து பேன் காற்றில் ஆற வைக்கவும்.
பிறகு, அரிசி பொடி பதத்திற்கு அரைத்து ஒரு பொளலில் போடவும்.
அத்துடன், வாழைப்பழம், வெல்லம், சர்க்கரை, ஏலக்காய் பொடியுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.
பிறகு, குழிப்பணியாரக் கல்லை அடிப்பில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் பாதி அளவிற்கு எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும், குழியில் மாவை ஊற்றி வேக விடவும்.
ஒரு பக்கம் நன்கு வெந்ததும, மறு பக்கம் திருப்பிப் போடவும்.
இரு பக்கமும் நன்றாக வெந்துள்ளதா என்று பார்த்தப் பிறகு இறக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் தித்திக்கும் குழிப்பணியாரம் ரெடி..!
சூப்பர் ஸ்னாக்ஸ்.. பலா பழ பணியாரம் ரெசிபி