உணர்ச்சியே இல்லையா..? வெட்கமா இல்லையா..? வீர மரணமடைந்த வீரர் சடலம் முன் செல்பி எடுத்த பாஜக அமைச்சருக்கு சூடு!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த வீரரின் சடலம் முன் செல்பி எடுத்த பாஜக மத்திய அமைச்சரின் செயலுக்கு நெட்டிசன்கள் வறுவறுவென வறுத்தெடுத்து வருகின்றனர்.

காஷ்மீரின் புல்வாமாவில் பாக்.ஆதரவு தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் வீர மரணமடைந்தனர். வீரர்களின் உடல் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

இந்த துக்கமான சம்பவத்திலும் பாஜக அரசியல் செய்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு பாஜக மத்திய அமைச்சர்கள் பறந்து பறந்து வீர மரணமடைந்த வீரர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்று தங்களை முன்னிலைப்படுத்த முயன்றனர்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் வசந்தகுமார் இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர் ஒருவர் செல்பி எடுத்து பேஸ்புக்கில் பதிவிட, நெட்டிசன்களிடம் படாதபாடுபட்டு வருகிறார்.

மத்திய பாஜக அரசில் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக இருப்பவர் அல்போன்ஸ் கண்ணன்தானம். கேரளாவைச் சேர்ந்தவர் தான். உயிரிழந்த வீரர் வசந்தகுமாரின் இறுதிச் சடங்கு வயநாடு அருகே சொந்த கிராமத்தில் நேற்று நடந்த போது அதில் பங்கேற்ற அமைச்சர் அல்போன்ஸ் வீரர் சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி அருகே நின்று ஸ்டைலாக செல்பி எடுத்து அதனை தமது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டு விட்டார்.

மத்திய அமைச்சரின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்துள்ள நெட்டிசன்கள், அறிவு இருக்கா? வெட்கமா இல்லையா? உணர்ச்சியே இல்லையா? மனுசன் தானா? சாவிலுமா விளம்பரம் என்று கன்னாபின்னாவென வறு...வறு... என வறுத்தெடுத்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் பேஸ்புக் பக்கத்தில் இருந்து செல்பி எடுத்த படத்தை இன்னும் நீக்காமல் தொடர்ந்து திட்டு வாங்கி வருகிறார் பாஜக அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம்.

More News >>