சீமானின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டுமாம்..: காயத்ரி ரகுராமன் ட்வீட்டுக்கு நாம் தமிழர் செம பதிலடி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என பாஜக நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 44 பேர் வீர மரணம் எய்தினர். இத்தாக்குதல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் சீமான் முன்பு அளித்த ஒரு பேட்டியில், பாகிஸ்தான் ஒரு அப்பாவி நாடு, பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது கோழைதனம் என கூறியிருந்தார். அதை இப்போது இந்துத்துவ அமைப்பினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இதை மேற்கோள்காட்டி ட்விட்டரில் காயத்ரி ரகுராம், சீமான், இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் குடியேற வேண்டும். சீமானின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சியினர் காயத்ரி ரகுராமை வெளுவெளுவென வெளுக்கின்றனர். இதனால் இன்று காலை முதல் தொடர்ந்து ட்விட்டரில் நாம் தமிழர் கட்சியினருக்கு பதிலளித்து குமுறிக் கொண்டிருக்கிறார் காயத்ரி.