அயல்நாட்டு திரைப்படங்களை காப்பி அடித்து பழகிய கமல்... திமுக பொளேர் அட்டாக்
கிராமசபை கூட்டங்களை தம்மை பார்த்து காப்பி அடித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டு சரமாரி பதில்களை திமுக அளித்து வருகிறது.
கிராமசபை கூட்டங்களை திமுக தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. தம்மை பார்த்தே இந்த கூட்டங்களை திமுக நடத்துகிறது என்பது கமல்ஹாசனின் குற்றச்சாட்டு.
இதற்கு திமுக தரப்பில் தொடர்ந்து பதிலடி தரப்பட்டு வருகிறது. தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்த போது நடத்திய போது கிராம சபை கூட்டங்களின் புகைப்படங்களை ‘தமிழக அரசின் இணையதளத்தில்’ இருந்து வெளியிட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் திமுக ஆட்சிக் காலத்தில் கிராமசபை கூட்டங்கள் தொடர்பாக அரசு சார்பில் வெளியான அறிக்கைகளையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்ட திமுகவின் ட்விட்டர் பக்கத்தில், அயல்நாட்டு திரைப்படங்களை 'காப்பி அடித்து' பழகிய கமலுக்கு உள்ளூர் வரலாற்றின் அரிச்சுவடி கூட தெரிந்திருக்காது'
மு.க.ஸ்டாலின், 2008-ல் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றது மட்டுமல்ல, தேர்தலே நடைபெறாத பாப்பப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துகளில் தேர்தல் நடத்திய சாதனையாளர் எனவும் பதிவிட்டுள்ளனர்.