ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தந்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து- உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தந்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் கமிஷன் ஆய்வு நடத்தியது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. ஆனால் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

மேலும் ஆலையை மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலர் வைகோ, என்ஜிஓ நிர்வாகி பாத்திமா பாபு ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.

இதனால் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி ரோஹிந்தன் ஃபாலி நாரிமன் தலைமையிலான பெஞ்ச், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்தது.

மேலும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆலையை திறக்கக்கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளை தள்ளுபடி செய்தும் உத்தரவிடப்பட்டது.

More News >>