புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் 2 பேரை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம். வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் பல மணி நேரமாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரும் வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்தனர்.

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது இயக்க முக்கியத் தீவிரவாதிகள் சிலர் பங்க்லான் என்ற இடத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை இந்திய ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். இதையறிந்த தீவிரவாதிகள் சரமாரியாக சுட இரு தரப்புக்கும் இடையே பலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியில் கம்ரான், ஹிலால் என்ற இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பில்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட மற்றொரு தீவிரவாதி தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.இந்த துப்பாக்சிச் சண்டையில் இந்திய ராணுவ மேஜர் ஒருவர் உட்பட 4 வீரர்களும், வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்தனர். பில்வா மா தாக்குதல் தொடர்பான தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 

காஷ்மீரின் புல் மாவாவில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை - இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு!

More News >>