முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறைத்தண்டனை - ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துசென்னை சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை பாலகிருஷ்ணா ரெட்டி இழந்தார்.
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பால கிருஷ்ணா ரெட்டி மேல் முறையீடு செய்து அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்குத் தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்ய முடியாது என மறுத்ததுடன், இந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்குமாறு கூறி விசாரணையை ஒத்தி வைத்தார்.