புதுவை முதல்வரை அண்டங்காக்கையுடன் ஒப்பிட்டு கிரண்பேடி ட்வீட்.. வெடிக்கும் இன்னொரு சர்ச்சை
புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி அம்மாநில முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில் நாராயணசாமியின் நிறத்தை இழிவுபடுத்தி கிரண்பேடி ட்வீட் செய்திருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமியை செயல்படவிடாமல் தம்மை முதல்வராக நினைத்து கொண்டு இயங்குகிறார் கிரண்பேடி. இது அம்மாநில அரசை முடக்கியுள்ளது.
இதனைக் கண்டித்தும் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுவையில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மேலும் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நாராயணசாமி முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில் நாராயணசாமியின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் அவரின் நிறத்தை இழிவுபடுத்தும் வகையில் காக்கையுடன் ஒப்பிட்டு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் கிரண்பேடி. இது புது சர்ச்சையாக வெடித்துள்ளது.