அய்யோ நான் செல்பியே எடுக்கலை ... அட்மின் தப்பா போட்டுட்டார் .....பாஜக மத்திய அமைச்சர் அலறல்!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சடலம் முன் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் செல்பி எடுத்த விவகாரத்தில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்க, அய்யோ... நான் செல்பியே எடுக்கலை, யாரோ எடுத்த போட்டோ வ என் அட்மின் தப்பா பதிவிட்டுட்டார் என்று அலறியதுடன் தம்மைப் பற்றி அவதூறு பரப்புவதாக போலீசிலும் புகார் செய்துள்ளார்.

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த சாந்தக் குமார் என்ற வீரரின் இறுதிச் சடங்கு சொந்த ஊரில் நடந்தது. இறுதிச் சடங்கில் பங்கேற்ற கேரளாவைச் சேர்ந்த மத்திய பாஜக அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் செல்பி எடுத்து தமது பேஸ்புக் பக்கத்தில் பதவிட்டதை, நெட்டிசன்கள் கன்னாபின்னாவென திட்டி வறுத்தெடுத்தது பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் தாம் ஒருபோதும் இது போன்ற கண்ணியமற்ற செயல்களை செய்ததில்லை என்று மறுத்துள்ளார் அல்போன்ஸ் .

இறுதிச் சடங்கின் போது தாம் பங்கேற்றதை யாரோ எடுத்த படத்தை என்னுடைய மீடியா செயலாளர் தெரியாமல் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு விட்டார். இதனை வைத்து என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் தம் மீது தொடர்ந்து அவதூறு பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேரள டி.ஜி.பி.யிடம் புகாரும் செய்துள்ளார் அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் .

More News >>