ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு சூப்
உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு சூப் எப்படி செய்வதென்று பார்க்கப் போறோம்.
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - ஒரு துண்டு
கொத்தமல்லி - அரை கட்டு
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.
வடிகட்டிய சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
இறுதியாக, சூப் கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறி 2 நிமிடங்களுக்கு பிறகு இறக்கவும்.
அவ்ளோதாங்க உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு சூப் ரெடி..!