மொறுமொறுப்பான பிரட் பஜ்ஜி ரெசிபி..!
ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம அனைவருக்கும் பிடித்த பிரட் பஜ்ஜி எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பிரட் துண்டுகள் - 5
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், சமையல் சோடா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு, பிரட் துண்டுகளை சதுரமாக வெட்டி வைக்கவும்.
தற்போது, அடுப்பில் கடாயை வைத்து அதில், எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரட் பஜ்ஜி ரெடி..!