தமிழ் சினிமாவில் மேலும் ஒரு வாரிசு நடிகை - யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மேலும் ஒரு வாரிசு நடிகை வரவுள்ளார். நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் அருண் பாண்டியன். இவருடைய மகள் கீர்த்தி. அருண் பாண்டியன் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்தார். கூடவே சினிமாவில் கதாநாயகி வாய்ப்பும் தேடி வந்தார். இந்தநிலையில் தற்போது அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் கனா பட புகழ் தர்ஷன் நடிக்கும் பேண்டஸி படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்க இருக்கிறார் கீர்த்தி. இதனை அவரே உறுதி செய்துள்ளார்.

``இதுகுறித்து கீர்த்தி கூறும்போது, ``அப்பாவின் தயாரிப்பு நிறுவனத்தில் உதவியாக இருந்தாலும் நடிப்பின் மீது தான் எனக்கு சிறுவயதில் இருந்தே ஆசை. இதற்காக தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக இருந்து நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறேன். இதற்கு முன்னதாக பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வேடங்களில் நடிப்பதற்கான ஸ்கோப் இல்லததால் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன.

நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரை எடுக்கவே விரும்புகிறேன். நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட கொள்ளாமலே பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன். அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். ஆனால் இத்தனை நாள் காத்திருந்ததுக்கு நல்ல வேடம் கிடைத்துள்ளது. இந்தப் படம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கானதாக இருக்கும்" எனப் பேசியுள்ளார்.

More News >>