ருசியான எலுமிச்சை ரசம் ரெசிபி
ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம எலுமிச்சை ரசம் எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை - 2
தக்காளி - 1
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி விதை - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 1
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு மசித்து கொள்ளவும் அல்லது மிக்ஸியில் கூழாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, பூண்டு, மிளகு, சீரகம், மல்லி விதை, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு தனியாக எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளி கலவை, அரைத்து வைத்த மசாலா, ஆகியவற்றுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
அத்துடன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவை சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைக்கவும்.
ரசம் நுரைத்துப் பொங்கி வரும்போது எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் கொட்டவும்.
இறுதியாக, கொத்துமல்லி தூவி இறக்கினால் சுவையான எலுமிச்சை ரசம் ரெடி..!