குழந்தைகளுக்கு பிடித்த கொய்யாப்பழ ஜூஸ் ரெசிபி

மக்களே.. குழந்தைகளுக்கு ஜீரண சக்தியை தூண்டும் கொய்யாப்பழ ஜூஸ் எப்படி செய்றதுனு பாக்க போறோம்.

தேவையான பொருட்கள்:

பழுத்த கொய்யா - ஒரு கப்

சர்க்கரை - சுவைக்கேற்ப

பால் - 2 கப்

தண்ணீர் - ஒரு கப்

வெண்ணிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்

ஐஸ் கட்டி - ஒரு கப்

செய்முறை:

கொய்யாப் பழம் ,சர்க்கரை ஆகிய இரண்டையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும்.

அத்துடன் பால், தண்ணீர், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு இன்னும் ஒரு ஓட்டு ஓட்டவும்..

அவ்வளவுதாங்க.. தம்ப்ளரில் ஊற்றி ஐஸ் கட்டி போட்டு பருகினால் டேஸ்டியான கொய்யாப்பழ ஜூஸ் ரெடி..!

குறிப்பு: குழந்தைகளுக்கு ஐஸ் கட்டி தவிர்க்கவும்.

More News >>