ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்றும் ஆஜரில்லை - 5 வது முறையாக அவகாசம் கேட்கிறார்!
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் இன்று ஆஜராக வேண்டிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அவகாசம் கேட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் உள்ளது. அதிமுக தரப்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பல்வேறு தரப்பில் 147 பேரிடம் விசாரணை முடிந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது ஆறுமுகசாமி ஆணையம் .ஆனால் இன்றும் வேறு பணிகளை காரணம் காட்டி வேறு தேதியில் ஆஜராக அவகாசம் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஆஜராக ஏற்கனவே 4 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மீண்டும் அவகாசம் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.