பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை திடீர் ரத்து!
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி இறுதி முடிவு அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமித் ஷாவின் வருகை தள்ளிப் போயுள்ளது.
இன்று காலை 10.45 மணிக்கு தனி விமானத்தில் அமித் ஷா வருகிறார் என்ற அறிவிப்பால் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு ஏற்பாடுகளும், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. திடீரென அமித் ஷா வருகை ரத்தான தகவல் வெளியானவுடன் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அமித் ஷா வருகையால் அதிமுக கூட்டணி பற்றிய இறுதி அறிவிப்பும், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவையெவை என்பது பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.