அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது - உடன்பாடு கையெழுத்தானது!
அதிமுக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்தது.சென்னையில் இன்று இரு கட்சித் தலைவர்களின் கடைசிக் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் உடன்பாடு கையெழுத்தானது.
கூட்டணி குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்காக இன்று காலை 10.30 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளும், பாமக தரப்பில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளும் சந்தித்துப் பேசினர்.
ஏற்கனவே பேசி முடித்தது போல் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது. அதிமுக தரப்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் பாமக தரப்பில் இளைஞரணித் தலைவர் அன்புமணியும் கையெழுத்திட்டனர்.