அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7+1 இடங்கள் - பிடிவாதம் பிடித்து ஜெயித்த ராமதாஸ்!
அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளையும் கூடுதலாக ராஜ்யசபா சீட்டையும் பெற்ற பாமக கூட்டணி பேரத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு டிமாண்ட் இருப்பதை நன்கு அறிந்து கொண்ட ராமதாஸ், திமுகவுடனும், அதிமுகவுடனும் மாறி மாறி கூட்டணி பேரங்களை நடத்தி கடைசியில் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகி விட்டார். பிடிவாதமாக பேரம் நடத்தி அதிமுக கூட்டணியில் 7 இடங்களுடன் ஒரு ராஜ்யசபா இட்த்தையும் உறுதி செய்து விட்டார்.
அத்துடன் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை, காவிரிப் பிரச்னை, மதுக்கடைகளை படிப்படையாக மூட வேண்டும், அரசு ஊழியர் பிரச்னை என 10 அம்சக் கோரிக்கைகளையும் கூட்டணி சேர நிர்பந்தம் செய்து அதிலும் சாதித்து விட்டார்.
அடுத்தபடியாக 7 தொகு திகள் எவை? என்பது குறித்தும் பிடிவாதமாக தமக்கு சாதகமான தொகுதிகளை பெற ராமதாஸ் முரண்டு பிடித்தாலும் ஆச்சர்யமில்லை.