திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்!
மக்களவைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுகவுடனான பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான குழுவினர் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கூட்டணியில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்க, திமுகவோ 6 அல்லது 7 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வருவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி எனக் கூறப்படுகிறது.
இதனால் இன்று மாலை கே.எஸ்.அழகிரி தலைமையிலான தமிழக காங். தலைவர்கள் ராகுல் காந்தியைச் சந்திக்கின்றனர். கூட்டணிப் பேச்சு குறித்து கே.எஸ்.அழகிரி டெல்லியில் கூறுகையில், இன்று மாலை ராகுல் காந்தியை சந்தித்த பின் திமுகவுடனான கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தலைக் கண்டு பயப்படுவது யார்?- தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!