ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது - முதல் போட்டியில் பெங்களூருவுடன் சென்னை மோதுகிறது!
இந்தாண்டு நடைபெற 12-வது ஐபிஎல் சீசன் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்கள் தேர்வு முடிவடைந்தாலும் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்படாமல் இருந்தது.மக்களவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஐபிஎல் போட்டிகளும் நடத்தப்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் துபை, அபுதாபி, ஷார்ஜா போன்ற வெளிநாட்டு மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படலாம் என்ற யோசனையும் ஐபிஎல் நிர்வாகத்திடம் இருந்தது.
இந்நிலையில் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மார்ச் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தற்போதைய முதல் கட்ட அட்டவணைப்படி மார்ச் 23 முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரையிலான 2 வார காலப் போட்டிகளுக்கான விபரம் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்தல் தேதி அறிவிப்பைப் பொறுத்து மற்ற போட்டிகள் விபரம் வெளியாகும் என்று தெரிகிறது.