அவருக்கு மட்டும் சீட் கிடையாது! தமிழிசை முடிவால் கொதிக்கும் எச்.ராஜா ஆதரவாளர்கள்

அதிமுக, பாஜக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் என்பதைவிட, இருக்கும் தலைவர்களில் யாரெல்லாம் போட்டியிடப் போகிறார்கள் என்பதுதான் தாமரைக் கட்சியின் பட்டிமன்றமாக இருக்கிறது.

எப்போதும் தென்சென்னையில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவும் இல.கணேசன், வயது மூப்பு காரணமாக ஒதுங்கிவிட்டார். கோவை தொகுதியை வானதியும் சி.பி.ராதாகிருஷ்ணனும் குறிவைத்துள்ளனர்.

இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சாய்ஸாக வானதி இருக்கிறார். இருவரில் யாருக்கு சீட் என்பது தமிழிசை கைகளில் இருக்கிறது. அதேபோல் சிவகங்கை தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் எச்.ராஜா. ஆனால் அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என பிஜேபியில் இருக்கும் ஒரு கோஷ்டி தீயாய் வேலை பார்த்து வருகிறது.

கடந்த நான்காண்டுகளில் ஹெச்.ராஜா பேச்சால், பொதுமக்கள் மத்தியில் என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி டெல்லிக்கு விரிவான அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள். மேலும் சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் தரப்பு போட்டியிடுவதால், எச்.ராஜாவுக்கான வெற்றி வாய்ப்பும் குறைவுதான்.

தோற்கும் சீட்டை எதற்காக அவருக்குக் கொடுக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்புகிறார்களாம். இதனால் கடும் ஆத்திரத்தில் இருக்கும் ராஜா, ஆன்டி இந்தியன்ஸ் எனப் பொருள்வரும்படியான எதாவது ஒரு வார்த்தையை விரைவில் வெளியிடுவார் என்கிறார்கள் அவரது அனுதாபிகள்.

More News >>