அதிமுக கூட்டணியில் தமாகா? அதிருப்தியாளர்களை சமாளித்த ஜி.கே.வாசன்
அதிமுக கூட்டணிக்குள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கொண்டு வருவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.
பிஜேபி கூட்டணியில் எங்களால் எப்படி இருக்க முடியும் என தமாகா பொறுப்பாளர்கள் கூறினாலும், நமக்கு வேறு வழியில்லை, காங்கிரஸ் இருக்கும் அணிக்குள் நாம் இருக்க முடியாது. நாம் வருவதை அவர்களும் விரும்ப மாட்டார்கள். தேர்தலில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல் அமைதியாக இருக்க முடியாது.
பிஜேபி ஆட்சியையே அய்யா மூப்பனார் கவிழ்த்தார் என்ற வாதமெல்லாம் அரசியல் களத்தில் எடுபடாது. ராகுல் தலைமையை மக்கள் பெரிதாக விரும்பவில்லை. பாஜக அணியில் இருக்கிறோம் என்பதைவிட அதிமுகவோடு கூட்டணியில் இருக்கிறோம் என எடுத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சமரசம் பேசி வருகிறார்களாம்.
அதிமுக அணியில் 2 இடங்கள் வரையில் ஒதுக்கப்பட இருக்கலாம் என ஜிகேவாசன் தரப்பினர் பேசி வருகின்றனர்.