செல்ஃபி காமிரா 32 எம்பி: விவோ வி 15 ப்ரோ அறிமுகம்!

பாப்-அப் வசதியுடன் கூடிய 32 எம்பி முன்பக்க காமிராவை கொண்டுள்ள விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன், பிப்ரவரி 20ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது.

அறிமுக விழாவின்போது இதன் சிறப்பம்சங்கள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இவையெல்லாம் இருக்கக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது.

6.39 அங்குல எஃப்ஹெச்டி மற்றும் சூப்பர் AMOLED வகை தொடுதிரை, குவால்காம் ஸ்நாப்டிராகன் 675 பிராசஸர் இவற்றுடன் பின் பக்கம் மூன்று காமிராக்களை கொண்டதாக விவோ வி15 வெளியாகக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. 6 ஜிபி RAM இயக்கவேகத்துடன் 128 ஜிபி சேமிப்பளவும், 3700 mAh ஆற்றல் கொண்ட மின்கலமும் இருக்கும்.

விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ஏறத்தாழ ரூ.30,000 ஆக இருக்கும். அமேசானின் இந்திய தளத்தின் (Amazon India) மூலம் இது விற்பனை செய்யப்படும்.

More News >>