அதிமுக கூட்டணியில் தேமுதிக நிலை ஊசலாட்டமா?- விஜயகாந்த் உடல்நலம் மட்டுமே விசாரித்ததாக கோயல் மழுப்பல்!
அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் இன்றே தொகுதி உடன்பாட்டில் கையெடுத்திடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. விஜயகாந்தின் வீட்டிற்கு பாஜக தலைவர்கள் சகிதம் சென்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உடல் நலம் விசாரிக்க மட்டுமே வந்ததாகக் கூறி விட்டு டெல்லி பறந்து விட்டார்.
அதிமுக கூட்டணி குறித்த பரபரபரப்பு தான் இன்றைய நாள் முழுவதும் நிலவியது. காலையில் பாமகவுடன் 7 +1 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டது. பிற்பகலில் அதிமுகவுடன் பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சந்திப்பு நடத்தி பாஜகவுக்கு 5 தொகுதிகள் உடன்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றார் பியூஸ் கோயல் சென்றார். அதிமுக கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டு வரும் பொறுப்பை பாஜக தான் முன்னின்று நடத்திய தால் கோயல் சந்திப்பில் தேமுதிக உடனான அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடும் இன்றே முடிவக்கு வந்து விடும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் விஜயகாந்த் வீட்டில் நடத்தப்பட்ட கூட்டணிப் பேச்சில் பாமகவை விட கூடுதல் சீட்களை தேமுதிக தரப்பில் முன் வைக்கப்பட்டதாகவும், இதனால் சுமூக உடன்பாடு எட்டப்படாமல், உடல் நலம் குறித்த மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் நடந்தது எனக் கூறி பியூஸ் கோயல் கிளம்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக நிலை ஊசலாட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.