தக்காளி குழம்பு
தக்காளி குழம்பு
தேவையானவை: நாட்டுத் தக்காளி- 4பச்சை மிளகாய் – 1பூண்டு - 4 பல் சீரகத்தூள் – ஒரு ஸ்பூ ன்மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்தனியாத்தூள் – 2 ஸ்பூன்தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்புபெரிய வெங்காயம் – 1 கறிவேப்பிலை - சிறிதளவுகொத்தமல்லி – சிறிதளவுஎண்ணெய் - 3 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு.செய்முறை: 2 தக்காளியை நறுக்கி கொள்ளவும்.2 தக்காளியை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத் தம் பருப்பு, கறிவேப்பிலை, பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரை த்த தக்காளி விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, நன்கு கொதித்து குழம்பு கெட்டியாகி எண் ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான தக்காளி குழம்பு ரெடி